போதி


அது அறிந்திருக்கவில்லை
தான்தான் அது என்று,
நாங்களும் அறிந்திருக்கவில்லை
அதுதான் அது என்று,
அவனும் அறிந்திருக்கமாட்டான்
தான்தான் அவன் ஆவோமென்று
மன்னனாய் அமர்ந்தவன்
மகானாய் எழுந்த நாள்வரை
ஈரத்துணிகளை உலர்த்தவும்,
காய்ந்த சுள்ளிகளை
அள்ளிச்செல்லவும் மட்டுமே
வந்துபோன சிலரைத்தவிர‌
தனிமையில்தான்
அலைந்துகொண்டிருந்தது
அதன் நிழல்.

Comments

  1. அருமை.வித்தியாசமான சிந்தனை
    மிகச் சரியான சொற்களைக் கொண்டு செய்த
    சொக்க வைக்கும் பாமாலை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இது கவிதை, இன்னும் பல கவிதை செய்ய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. போதிமரத்தின் தனிமை நிழல்...

    ReplyDelete

Post a Comment