நக(ரும்)ரின் அடையாளம்


பட்டாம் பூச்சிகள் காணவிலை,
பச்சைக்கிளிகள்(ஜோசிய)கூட்டிற்குள் பாதியும்
குறவர்களின் வயிற்றுப்பாட்டிற்கு மீதியுமாய்
மிச்சமேதுமில்லை இங்கே,
பூம்பூம் மாட்டை எவருக்கும் நினைவில்லை,
பாம்பாட்டியும் முறித்துக்கோண்டான்
பாம்புடனான உறவை,
குடுகுடுப்பைக்காரனுக்கு நல்லகாலம் பிறப்பது
ஊருக்கு வெளியே,
சிட்டுக்குருவிக‌ள்
கொஞ்சிய‌ இட‌ங்க‌ளை
சிற்ற‌லைவ‌ரிசையும்,ப‌ண்ப‌லைவரிசையும்
அடைத்துக்கொண்ட‌ன‌,
க‌ட்டெறும்புக‌ளையும்,
க‌ர‌ப்பான் பூச்சிக‌ளையும்
HIT அடித்து விர‌ட்டிவிட்டோம்,
ச‌ர்க‌ரை மிட்டாயும், ச‌ர்கர ராட்டின‌மும்
இட‌ம் பெய‌ர்ந்துவிட்ட‌ன‌ பொருட்காட்சிக்கு,
ஒவ்வொரு அடையாள‌த்தையும்
அழுத்த‌மாய் துடைத்தெரிந்துவிட்டு
அவ‌ச‌ர‌மாய் நிர‌ப்பிக்கொண்டிருக்கிறோம்
ந‌க‌ரை
பாலிதின் குப்பைக‌ளாலும்,
பாலைவ‌ன‌ புன்ன‌கையாலும்.
பிர‌ஷ‌ர் குர‌க்கும் மாத்திரையும்,
ப‌ண‌ம் சேர்க்கும் யாத்திரையும்,
கைய‌ட‌க்க‌ க‌ம்பியூட்ட‌ரும்,
க‌ட‌ன் அட்டை க‌னவு என‌
அர‌ங்கேறிக் கொண்டிருக்கிற‌து
புதிய‌ அடையாள‌ங்க‌ள்.

Comments

  1. அன்பின் அகலிகன் - கால ஓட்டத்தில் பழையன கழிதலும் புதிய புகுதலும் தவிர்க்க இயலாத ஒன்று - கால ஓட்டத்தோடு நாமும் செல்ல வேண்டியது தான் - வேறு வழி இல்லை - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment