நேற்றுமட்டும் நானிருந்திருந்தால்
விட்டிருக்கமாட்ட்டேன் - உன்னை
வெட்டிச் சாய்பதற்கு.
எத்தனையோ புகார்களோடுதான்
பரப்பிக்கொண்டிருந்தாய்
உன் கிளைகளையும்,
உதிர்த்துக்கொண்டிருந்தாய்
உன் இலைகளையும்
பக்கத்துவீட்டிற்குள்.
சமாதானம் சொல்லிக்கொண்டும்
சருகுகளை
அள்ளிவீசிக்கொண்டும்
காப்பாற்றிக்கொண்டிருந்தேன்
நேற்றுவரை.
.
சுயநலமும், கௌரவமும்
கூட்டாணியிட்டு
கொன்றுவிட்டன உன்னை
இன்று.
என் நெஞ்சில் ஆழப்பதிந்த
உன் வேர்களின் மிச்சம்
துளிர்க்கக்கூடும் என்றாவது ஓர்நாள்
என்ற நம்பிக்கையில்
கடக்கின்றேன் நீ நின்ற இடத்தை.
அருமை
ReplyDelete