ஒரு வேண்டுகோள்.

66 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் ஏழ்மை  காணாமல் போய்கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்குள் அது முற்றாக இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற முனைப்பில்( இன்னும் 34 ஆண்டுகள்தான் பாக்கி ) 100நாள் வேலைத்திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்ற அரசின் பல நல்ல திட்டங்களால் வறுமைக்கோடு எச்சில் தொட்டு அழிக்கப்பட்டு வருகிறது.( மொத்தமாய் அழிக்க எச்சில் பத்தவில்லையாம் மனமிருப்பவர்கள் உதவலாம்)

இந்திய அரசு இதுவரை (விலை)கூட்டிய எதையும் குறைத்ததே இல்லை என வருத்தப்படுபவர்களுக்காகத்தான் சராசரி மனிதனுக்கு  2400 கலோரி  உணவு தேவை என WHO னால் அறிவுருத்தப்பட்டிருந்த அளவை  1400 கலோரியாக குறைத்துகாட்டி மக்கள் மனதில் பால் வார்த்திருக்கிறது. ஒரு மனிதனுக்கு 1400 கலோரி உணவு என்பது கட்டிலில் படுத்திருப்பதற்கு மட்டுமே போதுமானது என்பதும் WHO குறிப்பிட்டிருக்கிறது கவனிக்கப்படவேண்டியது. ஆக மக்களை உழைக்கக்கூட கட்டாயப்படுத்தாத அரசை ஏன்தான் ஏசுகிறார்களோ தெரியவில்லை.

கணவன் மனைவி இரு குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு 2000 ரூபாய்குள் (Rs 32 X 2 நபர் = Rs 64X 30 நாட்கள் = Rs 1920 ) அத்தனை அத்தியாவசிய தேவைகளும் தீர்ந்துவிடும் அளவிற்கு பொருளாதாரத்தையும், விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருக்கிறதென்றால் அது சாதாரணவிஷயமில்லை என்பது ஏன் இந்த சமூக ஆர்வளார்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விளங்க மறுக்கிறது.

சமூக ஏற்ற தாழ்வு என்பது அந்தந்த மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது என அறிந்துதான் அதை போக்கும் நடவடிக்கையாய் மதுக்கடைகளைகூட மாநிலஅரசே ஏற்று நடத்த அனுமதித்திருக்கிறது.. எந்த அரசு மதுக்கடைகளிளாவது இரட்டை குவளை முறை உள்ளதா? எந்த அரசு பேருந்துகளிளாவது இரட்டை இருக்கைமுறை உண்டா? இதையே ஏன் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தகோரி சமூக ஆர்வலர்கள் வலியுருத்தக்கூடாது. ஏதோ சில கிராமங்களில் லேசாய் சில கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது அவ்வளாவே? ஊரின் குறுக்கே சுவர் எழுப்பியதுகூட கொசுக்கள் வராமல் இருக்கத்தான். அந்த சுவர் இருந்தவரை தொல்லை இல்லாமல் இருந்தது இப்ப பாருங்க எவ்வளவு பிரச்சனை. அதைபோய் ஏதோ தாழ்த்தப்பட்டவர், உயர்குடி பிரச்சனை என்று வதந்தி பரப்புகின்றனர் அவற்றை நாம் புறங்கையால் புறக்கணிக்க வேண்டும் என மிக கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 வல்லரசாக வேண்டுமென்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும். அந்த கனவை நிறைவேற்றும் தகுதி அரசியல்வாதிகளுக்குதான் உள்ளதே தவிர விமர்சகர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இல்லை. எனவே நாம் நம் அரசியல்வாதிகளின் ஆட்டத்திற்கெல்லாம் தலை ஆட்டினால் இந்தியா 2050 ஆம் ஆண்டு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

மந்திரி:  மன்னா நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது,

மன்னர்: அப்படியா?

மந்திரி:   ஆம் மன்னா மழை பொய்த்தது ,ஆறுகளில் தன்ணீர் இல்லை விவசாயம் பாதிக்கப்பட்டது, விலைவாசி கட்டுப்பாட்டில் இல்லை மக்கள் ஒருவேளை சோறுகூட  கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

மன்னர்:  மக்கள் ஏன் இவ்வளவு பிடிவாதக்காரர்களாக இருக்கிறார்கள்? சொறு கிடைக்காவிட்டால் என்ன பஞ்சம் தீரும்வரை இட்லியோ, தோசையோ சாப்பிட்டு பழகிக்கொள்ளளாமே?  

இந்த கதைக்கும் என் கட்(காட்டுத்தனமான)டுரைக்கும் சம்பந்தமிருந்தால் நான் பொருப்பல்ல. 

Comments

  1. ஒரு மனிதனுக்கு 1400 கலோரி உணவு என்பது கட்டிலில் படுத்திருப்பதற்கு மட்டுமே போதுமானது என்பதும் WHO குறிப்பிட்டிருக்கிறது அது WHO என்று நினைத்திருக்கிறேன் இல்லை என்றால் சரியானதை சுட்டிக்காட்டுங்கள் மாற்றிவிடுகிறேன்

    ReplyDelete
  2. மன்மோகன் சிங்கின் கொள்கைகள் பன்னாட்டு நிறுவன கொள்ளைகளுக்கு வழி வகுக்கின்றது என்று சொல்லும் எதிர்க்கட்சிகள் கூட ஒன்று சேர்ந்து எதிர்க்க நினைக்க மாட்டேன் என்பதிலிருந்து அறியும் நீதி யாதெனில்

    கொள்ளையர்களோடு ஒற்றுமையோடு பழகு பாப்பா
    உனக்குண்டான பங்கு கிடைத்திடும் பாப்பா
    கத்துவது போல நடி பாப்பா
    கடைசியில் உன்னையும் கண்டு கொள்வார்கள் பாப்பா.

    ReplyDelete
    Replies
    1. ஆளுவோர் பேச்சுக்கு தலைசாய்த்தால் பாப்பா
      ஆளுக்கொரு MP ஸீட்டு நிச்சயமடி பாப்பா

      உலகத்தோடு ஒட்ட ஒழுகள் கற்றிடவேண்டும்
      ஒழுகியதில் ஒருகை அள்ளிப்பருகிடல் வேண்டும்

      Delete
  3. //64 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில்//

    ஹி,,ஹி,,,நல்லா கணக்கு போடுறிங்க...66 ஆம் சுதந்திர தினம் இப்போ தான் போச்சு!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மகிழ்ச்சி!ஆண்டை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ஆக WHO சரிதான் என்று எடுத்துக்கொள்ளவேண்டியத்துதான்.

      Delete

Post a Comment