யாரும் குடிபுகாத வீட்டின் அறைகள்
காத்துக்கொண்டிருக்கிறன
குடியேறப்போகும்
குடும்பத்திற்க்காகவோ
பிரம்மச்சாரிக்காகவோ.
யாரும் குடிபுகாத வீட்டின் அலமாரிகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
யாரும் புரட்டி பார்க்காத புத்தகங்கள்
நிறைக்கப்படவோ
பழம்பெருமைபேசும்
கோப்பைகள் அடுக்கப்படவோ,
யாரும் குடிபுகாத வீட்டின் சுவர்கள்
காத்துக்கொண்டிருக்கின்றன
அவற்றை அலங்கறிக்கப்போகும்
நினைவுகளின் நீட்சிகளுக்கான
ஆணிகள் அறையப்படுவதர்காய்,
யாரும் குடிபுகாத வீட்டின்
சன்னல் கம்பிகள்
சுத்தப்படுத்தப்பட்டுகிடக்கிறது
இளைப்பாறிச்செல்லும் பறவைகளின்
எச்சங்களால்.
யாரும் குடிபுகாத வீட்டின்
தோட்டத்தில்
யாரும் பறித்துவிடக்கூடிய
சாத்தியமில்லா மகிழ்வில்
பூத்து நிற்கின்றன மலர்கள்
இயல்பைவிட மணமாய்..
யாரும் குடிபுகாத வீட்டில்
எதுவுமே களவுபோகும்
சாத்தியமில்லை - என்றாலும்
கதவுகள்மட்டும் பூட்டியேகிடக்கின்றன
எப்போதும்,
யாரும் குடிபுகாத வீடு
காத்துக்கொண்டிருக்கிறது
பல கனவுகளை உருவாக்கவும்
சிலவற்றை அழிக்கவும்.
பல கனவுகளை உருவாக்கவும்
ReplyDeleteசிலவற்றை அழிக்கவும்.
>>
நிஜம்தான். ஒவ்வொரு வீடும் பல ஆயிரம் கதை சொல்லும்.
உண்மைதான். நன்றி.
Deleteயாரும் குடிபுகாத வீட்டில்
ReplyDeleteஎதுவுமே களவுபோகும்
சாத்தியமில்லை - என்றலும்
கதவுகள்மட்டும் பூட்டியேகிடக்கின்றன
எபோதும்,//
பிழைகள் இல்லாத கவிதை இன்னும் படிக்க இனிமையாக இருக்கும்....அல்லவா?
உண்மைதான் சரி செய்து விட்டேன்
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்
பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2015/01/2_21.html?showComment=1421802621436#c6674180774255170451
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/