இளையராஜா இசையமைத்து பாடிய பாடல்களில் "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட...." என்ற பாடல் கேட்கின்ற ஒவ்வொருவரையும் தாலாட்டும் என்றே சொல்லலாம். இந்த பாடலை முதல் முறையாய் ஆடியோவில் கேட்டு மயங்கிய போது வயது விடலையில் இருந்தது. நம்புவீர்களோ இல்லையோ கிட்டத்தட்ட நான் கற்பனையில் அலைந்த எல்லா இடங்களையும் அந்தபாடலில் காணமுடிந்தது. என் கற்பனை என்னை ஏமாற்றியது அந்தபாடலில் குரலைத்தவிர வேருஎங்குமே ஆண்வாடையே இல்லை என்பதில்தான். ஏனென்றால் பாடலின் ஒவ்வொருவரியும் காதலன் காதலியைப்பற்றி புகழ்ந்தும் வர்ணித்தும் பாடுவதாய் எண்ணி நானும் என் அந்தவயது காதலியை நினைத்து கற்பனையில் அவளோடு பாடித்திரிந்திருந்தேன். ஆனால் பாடல் காட்சியில் 3 பெண்களின் உறவையும், நட்பையும் அவர்களின் அன்யோன்யத்தையும் மிக அழகாய் காட்சிப்படுத்தி அசத்தியிருந்தார்கள்.
THINK OUT OF THE BOX என்பார்களே அதற்கு இப்பாடல் ஒரு உதரணம். பொதுவாய் சிட்டுக்குருவி, பாண்டியாட்டம், மாங்காய் திருட்டு இப்படியான பெண்களுக்குள்ளான உறவைச்சொல்ல உபயோகப்படுத்தும் வார்தகளில் சலித்துபோன இயக்குனர் ஒரு காதல் பாடலை 3 பெண்களுக்கிடையிலான உறவிற்கு பயன்படுத்தியிருப்பதாலேயே இது அசாதாரணமான பாடலாக அமைந்திருக்கிறது.
இப்படியான மேலும் சில பாடல்கள் தொடரும்....
Comments
Post a Comment