வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்!
கடந்த 05-08-11 அன்று தினமலர் பத்திரிகையில் 3றாவது பக்கம் கவனிக்கப்படக்கூடிய அளவில்(size) செய்திவெளியிட்டிருந்தனர்.திரு நாராயண சூரியா எனும் வீரர் 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த வளைப்பந்து உலகக்கோப்பையில் விளையாடி இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்தார். 2010 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த வளைப்பந்து உலகக்கோப்பையில் கேப்டனாக விளையாடி வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்தார். அதற்கெல்லாம் போதிய அங்கிகாரம் கிடைக்காமல் தற்போது 140 ரூ தினகூலிக்கு வேலைப்பார்கிறார். இது குறித்து அரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதெல்லாம் தினமலரில் வெளியான செய்தி இதில் உண்மையான அவலம் என்னவென்றால் வளைப்பந்து என்றால் என்னவென்று தமிழகத்தின் இன்றைய தலைமுறைக்கு தெரியுமாவென்று தெரியவில்லை. உண்மையில் எனக்கும்கூட தெரியாதபடியால்(எனக்குத்தெரிந்த என் நண்பர்களுக்கும் தெரியவில்லை ) google லில் தேடிப்பார்த்தேன் அதிலும் என்னால் வளைப்பந்து என்றால் என்னவென்று கண்டுபிடிக்கமுடியவிலை. உண்மையில் வளைப்பந்து என்பது வாலிபால் ஆ, பேஸ்கட்பால் ஆ, ஸ்னூக்கரா, நெட்பால் ஆ, அல்லது பெண்கள்விளையாடும் ரிங் எனப்படும் விளையாட்டா? என்ன கொடுமை ஆர்.சீனிவாசன் ( தினமலரில் இதை எழுதியவர் ) நீங்களாவது பிராக்கெட்டில் ஆங்கிலத்தில் எழுதிதொலைத்திருக்கக்கூடாதா? வளைபந்து இந்திய அணி கேப்டனுக்கு நேர்ந்த அவலத்தைவிட இது தமிழுக்கும் தமிழனாகிய எனக்கும்( தமிழனாகிய நமுக்கும்னு போட்டா உண்மையிலேயே அவங்களுக்கு தெரியாட்டியும் எல்லாம் தெரிஞ்சாமாதிரி வீம்புக்காச்சும் சண்டைக்கு வந்துடுவாங்க ) நேர்ந்த மிகப்பெரிய அவலமல்லவா?
நாராயண சூரியா
உண்மையிலேயே யாருக்காவது வளைப்பந்து விளையாட்டைப்பத்தி தெரிந்திருதால் எனக்கும் விளக்கவும். link இருந்தா அனுப்பலாம்.
Comments
Post a Comment