வால்மர்ட் ஸ்..ஸப்பா கண்ணகட்டுதே!


சிலரை வர்த்தகத்தில் அன்னியமுதலீடு


அனுமதிக்க முடியாதுன்னு அம்மாவும், கொள்கையளவில் எதிர்த்தாலும் கூட்டணிக்காக ஏற்றுக்கொள்கிறேன்னு தாத்தாவும் மாறிமாறி நாடகமாடிகிட்டிருந்தாலும் வரவேண்டியவன் என்னவோ வரத்தான்போறான். இல்ல இல்ல வந்துட்டான். மான்தோலு போத்திகிட்டு சிங்கம் வந்திடிச்சாம் ன்னு ஒரு பாட்டு வரும்மில்ல அதுபோல வேற‌பேர்ல அவன் பூந்துட்டான். பெஸ்ட்டு பிரைஸ் இதுதான் பேரு. வால்மார்ட் ங்ற‌ பேரைவிட இது சொல்றதுக்கு ஈஸியா இருக்கில்ல. அதுவுமில்லாம அம்மா சொன்னா சொன்னதுதான் வால்மார்ட்டை உள்ள விட்டாங்களா பாத்தியான்னு சொல்லிக்கவும் வசதியா இருக்கும்.

2008 லேர்தே உள்ள வரத்துக்கான முயற்சில பல கோடி ரூபாய் அன்பளிப்பு வழங்கப்படிருக்குன்னு சொல்லிக்கராங்க. அப்போ நாங்க ஆட்சியில இல்லை அதனால் எங்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கல இப்போ ஆட்சி எங்களது. கொடுக்கவேண்டியதை கொடுங்கன்னு கேட்டு வாங்கினவன் காட்டமாட்டானா தன் விசுவாசத்தை.  வால்மார்ட் பேர்ல வந்தாத்தானே அனுமதி இல்லை பெஸ்ட்டு பிரைஸ் என்கிற பேர்ல உள்ளவா யாருகேப்பாங்க. இடத்தை கொடுத்தா மடத்தை பிடிச்சானாங்கற கதையா சில்லரை வர்த்தகமா வரவேண்டியவன் இந்த பேர்ல மொத்தவியாபாரமும் செயப்போற‌தா தெரியுது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் பெருமளவு பாதிக்கப்படப்போவது சிறு வியாபாரிகள்தான்னு ஊரே சேர்ந்து கும்மி அடிச்சுகிட்டிருக்கோம் ஆனா அந்த வியாபாரிகளையே டார்கட் பண்ணி அடிக்கிறான். எந்தவித முன்பணமும் செலுத்தாமல் தங்கள் கடைப்பெயரை பதிவு செய்துகொள்பவர்களுக்கு வெளி மார்கெட்டைவிட 30% வரை விலை குறைப்பு மற்றும் 15 நாள் கடன் வசதி அளிக்கப்படும்ன்னு ஆசைகாட்றான். இந்த ஆசை வார்த்தைகளால் ஈக்கப்படும் வியாபாரி இது தேவை என்றும் தேவை இல்லை என்றும் தங்களுக்குள்ளாகவே பிரிந்து நிற்கப்போகிறான். இதன் விளைவாய் ..............   ஸ்..ஸப்பா இபடி யோசிகிட்டேபோனா கண்ணகட்டுதே நீங்களே யோசிச்சுகங்க பிளீஸ்.

Comments

  1. Long before FDI in retail was approved, FDI in wholesale was approved by our Govt. Walmart and Bharti (if I'm not wrong) are together in this. Thier outlet is called "Best Price". So till this moment, they are in wholesale. However, we will see them in retail too. Our politicians have sold us to US corporates.

    ReplyDelete
    Replies
    1. மொத்தவிற்பனையில் ஏற்கனவே வந்துட்டான் சரிதான் . பெங்களூரில் களைகட்டி நடக்கிறது. தமிழகத்தைப்பபொருத்தவரை அந்நிறுவனம் கால் பதிக்கும்போதே சிறுவியாபாரிகளையும் உள்ளிழுத்துக்கொள்கிறது என்பதுதான் விஷயம். இதனால் வியாபாரிகள் மத்தியில் கருத்துவேறுபாடு தோன்றக்கூடும். அது அவனுக்கு சாதகமானதாகிவிடும்.

      Delete
  2. neer uyara varapu uyarum, varapu uyara nel uyarum

    un varnuman uyara Wall martum uyarum. idu kallathin kattayam.

    neeyum nanum sollavatharkillai

    oore nirvanamai irukka komanam kattinavan kommali ( appa evallavu K)

    ReplyDelete
  3. second line correction -- Varumanam

    ReplyDelete

Post a Comment